அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு
பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயிலதனியார் பள்ளிகளில் பல ஆயிரம்
ரூபாய் கட்டணம் செலுத்திகஷ்டப்பட்டு சேர்த்து வருகின்றனர்.
பெற்றோர்களின் இந்த மோகத்தால் அரசு மற்றும் ஊராட்சிஒன்றிய ஆரம்ப பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை சதவீதம்ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பல அரசு
பள்ளிகளில்ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்குஇரண்டு
ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பள்ளி செயலர் உத்தரவு
இந்தகல்வியாண்டில் கல்வித் துறையின் முன்னேற்றநடவடிக்கையால் அரசு
பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்சேர்க்கையில் ஒவ்வொரு பள்ளியும் கவனம்
செலுத்திஎண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதில் கடந்த 2011- -2012ல், 1ம்
வகுப்பில் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு நடப்புகல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை குறைய கூடாது என பள்ளிகல்வி துறை செயலர் உதயச்சந்திரன் , பள்ளி
தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஐந்தாண்டுக்கு முந்தைய இலக்கு
இதன்படி தேனி மாவட்டத்தில் 2011- -2012ல் 5,188 மாணவர்கள் 1ம்வகுப்பில்
சேர்க்கை நடந்துள்ளது. கடந்த ஆண்டில் 4,155 மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் நேற்றுவரை 3,865 மாணவர்கள் 1ம்
வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வரும் செப்டம்பர் விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர் சேர்க்கைக்காகவிழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி உள் கட்டமைப்பு
வசதிகள் போன்றவிபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து சேர்க்கை
அதிகாரிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அதிகாரி
ஒருவர்தெரிவித்தார்
No comments:
Post a Comment