கட்டடம் கட்ட இடம் கிடைக்காததால், மதுரையில் ஆசிரியர் ஓய்வு இல்லம் கட்டும் பணி கைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காக, பெற்றோர், ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது.
இந்த கழகத்தின் சார்பில், கொடி நாள் நிதி, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு, அந்த நிதி ஆசிரியர்களின் நலனுக்கு செலவிடப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் நலநிதி திட்டத்தில், சென்னை மற்றும் திருச்சியில், ஆசிரியர் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருச்சிக்கு வரும் ஆசிரியர்கள், இவற்றில் குறைந்த வாடகையில் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வரும், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்கும் இடம் தேவைப்பட்டது. அதனால், மதுரையிலும், அதை தொடர்ந்து கோவையிலும், ஆசிரியர் இல்லம் அமைக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக இடம் தேடியும், மதுரையில் கிடைக்கவில்லை. எனவே, மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டும் முடிவு, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது; கோவையில் மட்டும் கட்டப்படும் என, அரசின் கொள்கை விளக்க குறிப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment