Pages

Thursday, December 10, 2015

தென் மாவட்டங்களில் இன்று கன மழை


வங்க கடலின், தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு நிலை, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளதால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:



இரு நாட்களுக்கு முன், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான, காற்று அழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை நிலவரப்படி, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளது.இதனால், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலுாரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு இல்லை.

சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில், விட்டு விட்டு மழை பெய்யலாம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 22; தஞ்சை மாவட்டம், மதுக்கூர் - 9;நெல்லை மாவட்டம், பாபநாசம் - 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment