Pages

Tuesday, August 25, 2015

இந்திய ரூபாய் அச்சடிக்கும் செலவீனம்

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?


குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க அதிக செலவும், மதிப்பு அதிகம் கொண்ட நோட்டுகள் அச்சடிக்க குறைந்த செலவும் ஆகிறது என்பது தான் உண்மை.
உதாரணத்திற்கு ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது.

அதனால்தான் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்கள்.
(இப்போது மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்). அதேநேரம் ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 48 பைசா மட்டுமே செலவாகிறது.
பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க 96 பைசாவும், இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 46 பைசாவும், ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 81 பைசாவும், நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க 1 ரூபாய் 79 பைசாவும், 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசாவும், ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க 4 ரூபாய் 6 பைசாவும் செலவாகின்றன.

இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 100 ரூபாய் நோட்டை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட, 50 ரூபாய் நோட்டு அச்சிட ஆகும் செலவு அதிகம். ரூபாய் நோட்டுகள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

ஒரு நாட்டில் எந்த அளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒரு நாடு அதன் விருப்பத்திற்கு ஏற்ப நோட்டை அச்சடித்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதன்படியே ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடிக்க முடியும். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு நாடும் அதன் இஷ்டத்துக்கு பணத்தை அச்சடித்து வெளிவிட்டு விடும்.

No comments:

Post a Comment