Pages

Wednesday, August 26, 2015

வருமான வரிக் கணக்கு தாக்கல்: நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்

      தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிதியாண்டு 2014-15-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய, வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

            சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர் என தணிக்கைக்கு உள்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:
 1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர் 
 2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர் 
 3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.
சென்னையில்...வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வோர் மின்னணு முறையிலோ அல்லது படிவத்தைப் பூர்த்தி செய்தோ கணக்கைத் தாக்கல் செய்ய சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் உதவியாளர்கள் (Tax Preparers) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை கடைசி நாளான வரும் 31-ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம். 
தாம்பரம் பகுதிக்குள்பட்ட வருமான வரி செலுத்துவோர், தாம்பரத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில்தான் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கு மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு "ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக எல்லையைத் தெரிந்துகொள்ள... வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை "www.tnincometax.gov.in' என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment