Pages

Wednesday, October 5, 2016

இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது; இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இட மாறுதல் பெற்றனர். அவர்களில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், இன்னும் தங்களின் பழைய இடங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.



இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கவுன்சிலிங்கில் இட மாறுதல் பெற்றோர், தங்கள் பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, தொடக்கப் பள்ளிகளில் மாறுதல் பெற்றோரை, மாற்று ஆசிரியர் வரும் வரை விடுவிக்க கூடாது என்பதே அந்த நிபந்தனை. ஆனால், மாறுதல் பெற்றோருக்குப் பதிலாக, இரண்டு மாதங்களாக, மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

பல ஆண்டுகள் காத்திருந்து, ஆசிரியர்கள் விருப்பமான இடத்திற்கு செல்ல ஒதுக்கீடு பெற்றும் போய் சேர முடியவில்லை. மாற்று ஆசிரியரை நியமிக்காமல், அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால், சங்கங்களுடன் சேர்ந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment