Pages

Wednesday, October 5, 2016

3 பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பிரிட்டனைச்  சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கொள்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்ததற்காக அவர்கள் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.    இயற்பியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசை, சுவீடன் நாட்டின் நோபல் தேர்வுக்குழு அறிவித்து வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுபடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 


இயற்பியலில் குவாண்டம் கொள்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பிற்காக டேவிட் தவுலஷ், டங்கன் ஹால்டேன், மிக்கேல் கோஸ்டர்லைஸ் ஆகியோர் இந்த பரிசை இணைந்து பெறுகின்றனர். குவாண்டம் கோட்பாட்டின்படி பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு எலக்ரானிக்சில் புதிய கண்டுபிடிப்பு அல்லது புதிய குவாண்டம் கம்ப்யூட்டர்களை கண்டறிய உதவும் என தேர்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.  இதன் மூலம் பரிசாக பெறும் 8 மில்லியன் சுவீடன் குரோனர் பணத்தை அதாவது 6,19,12012 ரூபாயை மூவரும் சரிசமமாக பிரித்து கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment