Pages

Saturday, March 5, 2016

'ஆன்-லைன்' பதிவு அறிமுகம் ஆகிறது எப்.ஐ.ஆர்.,படிவம் சப்ளை நிறுத்தம்:காவல்துறை புதுத்திட்டம்


சிவகங்கை:அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பதிவாகும் எப்.ஐ.ஆர்.,விபரங்களை ஆன்-லைனில் பதியும் திட்டத்தால் எப்.ஐ.ஆர்., படிவங்கள் சப்ளையை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.ஸ்டேஷன்களில் வழக்கு பதிய முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) என்ற 'பிரின்ட் அவுட்' படிவம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில், இது சப்ளை செய்யப்படுகிறது. இதில் வரிசை எண், எப்.ஐ.ஆர்.,நகல் எண் உட்பட பல்வேறு விபரங்கள் அடங்கியிருக்கும்.



காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் அனைத்து ஸ்டேஷன்களையும் ஒருங்கிணைத்து, 'சிப்ரஸ்' சாப்ட்வேர் மூலம் எப்.ஐ.ஆர்., விபரங்கள் ஆன்-லைனில் பதியப்படுகிறது. பெரும்பாலான ஸ்டேஷன்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு ஸ்டேஷன் எப்.ஐ.ஆர்., விபரத்தை வேறொரு மாவட்டத்திலும் பார்க்க முடியும்.
தற்போது எப் .ஐ.ஆர்.,படிவத்தை பயன்படுத்தி, வழக்கு பதிந்து, அதன் விபரங்களை ஆன்-லைனில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர காவல்துறை திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பதிவு செய்து, 'பிரின்ட் அவுட்' எடுத்துக் கொள்ளும் புதிய திட்டம் வருகிறது. பிரின்ட் அவுட்' நகலில் விசாரணை அலுவலர் கையெழுத்திட்டு நீதிமன்றம், முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் படிவத்தில் எப்.ஐ.ஆர்.,பதிய அவசியமிருக்காது.படிவங்களை தயாரிக்கும் செலவும் மிச்சமாகும்.

எப்.ஐ.ஆர்.,படிவங்களை நிறுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் படிவங்கள் சப்ளை, இருப்பு விபரம் சேகரிக்கப்படுகிறது.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நவீன தொழில் நுட்பத்தில் கம்ப்யூட்டரில் டைப் செய்து, அதை 'பிரின்ட் அவுட்' எடுத்து, நீதிமன்றம் உட்பட தேவையான அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் அரசுக்கு செலவு குறையும். இப்புதிய திட்டம் விறைவில் நடைமுறைப்படுத்த பள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment