Pages

Saturday, March 5, 2016

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு


சென்னை:''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.


இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன
*தேர்தல் பிரசாரம் செய்வோர், வெவ்வேறு ஜாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, தற்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், பரஸ்பரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது
*ஓட்டுகளை பெற, ஜாதி அல்லது சமுதாய உணர்வுகளின் அடிப்படையில், வேண்டுகோள் விடுக்கக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது பிற வழிபாட்டு இடங்களை, தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தக்கூடாது

*அரசியல் கட்சி அல்லது வேட்பாளர், தான் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் குறித்து, உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு, முன்னரே தெரிவிக்க வேண்டும்
*கூட்டம் தொடர்பாக, ஒலிபெருக்கியோ அல்லது வேறு வசதிகளுக்கான அனுமதி அல்லது உரிமம் பெற, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன்னதாகவே விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ள வேண்டும்
*ஊர்வலம் துவங்கும் நேரம், ஆரம்பிக்கும் இடம், அது செல்லும் வழித்தடம், முடிவடையும் இடம், போன்ற விவரங்களை, முன்கூட்டியே போலீஸ் துறைக்கு தெரிவித்து, உரிய முன் அனுமதியுடன் நடத்த வேண்டும்
*கூட்டம், ஊர்வலம் மற்றும் பிற அனுமதிகளைப் பெற, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment