Pages

Wednesday, March 9, 2016

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டினால் ஓராண்டு ஜெயில் தலைமை தேர்தல் அதிகாரி; ராஜேஷ் லக்கானி தகவல்


மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பான போஸ்டர் ஒட்டினால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.பிடிபட்ட பணம்

சென்னையில் நிருபர்களுக்கு, ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:–சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பறக்கும் படை மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.30.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.23.7 லட்சம் சென்னையிலும், ரூ.4.90 லட்சம் நீலகிரியில் பிடிபட்டது. மீதமுள்ள ரூ.2 லட்சம் வெவ்வேறு இடங்களில் பிடிபட்டுள்ளது.இந்த தொகை அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். பணத்தின் உரிமையாளர் அதற்கான ஆவணத்தைக் காட்டி அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
மதுபான வழக்குகள்

அதிக மதுபானம் கொண்டுசென்ற சம்பவம் தொடர்பாக 12 வழக்குகள் உள்பட தேர்தல் விதிகள் மீறல் தொடர்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் சுவர்களில் விளம்பரம் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையையும் மீறி சென்னை உள்பட சில இடங்களில் போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.சென்னையில் சுமார் 700 பேர் இந்தப் சுவர் விளம்பரப் பணியில் உள்ளனர். அவர்களை அழைத்துப் பேசி அறிவுரை வழங்கவேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரை கேட்டுக் கொண்டுள்ளேன்.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரங்கள் செய்வது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்கள், தமிழ்நாடு திறந்தவெளி (உரு அழிப்பு தடுப்பு) சட்டம் 1959 என்ற சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு ஓராண்டு ஜெயில் தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ காப்பீட்டுத்திட்டம்

முதல்–அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டமாகும். அந்தத் திட்டத்தில் இணைந்திருப்பவர் அதிலுள்ள பயனைப் பெறுவதற்குத் தடையில்லை என்றும் ஆனால் புதிதாக அதில் சேர்ந்து, அட்டையைப் பெறமுடியாது என்றும் ராஜேஷ் லக்கானி கூறியிருந்தார்.மேலும் இதுசம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் என்னைக் கேட்டுக் கொண்டால், அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்து, அறிவுரையை கேட்டுப் பெறுவோம் என்றும் கூறியிருந்தார். இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதிப்பெற்று, தொடர்ந்து திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று பதிலளித்தார்

No comments:

Post a Comment