Pages

Saturday, December 12, 2015

மருத்துவம், என்ஜினீயரிங் சான்றுகளை பெற சிறப்பு முகாம்கள் கல்லூரிகளில் 14-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் மருத்துவபடிப்பு தொடர்பான சான்றிதழ்கள், என்ஜினீயரிங் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் பெற அந்தந்த கல்லூரிகளில் 14-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.


மருத்துவக் கல்லூரிகளில் முகாம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் மருத்துவக்கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் 14-ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்களை இழந்தவர்களிடம் விண்ணப்பம் கொடுத்து அவர்கள் அவற்றை பூர்த்தி செய்து தருவார்கள். அவற்றை பெற்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட உடன் ஒரு வாரத்தில் சான்று கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் முகாம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டு அதிகாரி, அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் 14-ந்தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்படவேண்டும்.

மேற்கண்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை மழை வெள்ளத்தால் இழந்திருந்தால் அவர்களுக்கு விண்ணப்பம் கொடுத்து அதை நிரப்பி தரும்படி கூறவேண்டும்.

சான்றிதழ்கள்

அவர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து தந்த பின்னர் அதில் ஒரு காப்பியை மாணவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்ததற்கு அடையாளமாக வழங்க வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ்கள் கல்லூரிகள் வழியாக ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment