Pages

Tuesday, October 20, 2015

23ம் தேதி, அரசு விடுமுறை கிடையாது: பள்ளிகள், இயங்கும்

மொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.

இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஐந்து நாட்கள் விடுமுறையை, வெளியூர் சென்று கொண்டாட, பெரும்பாலானோர் ஏற்பாடு செய்தனர். இதனால், ரயில்கள், பஸ்கள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், 'மொகரம்' விடுமுறை தேதியை மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் நாள் பிறை, 24ம் தேதி வருவதால், அன்றைய தினம், 'மொகரம்' பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, அன்று அரசு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசின் முதன்மை ஹாஜி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


அதை ஏற்று, 23ம் தேதிக்கு பதிலாக, 24ம் தேதி, 'மொகரம்' அரசு விடுமுறை என, நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், வரும் 23ம் தேதி, அரசு விடுமுறை கிடையாது. அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இயங்கும். தொடர் விடுமுறை மாறியது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு உத்தரவால், ஐந்து நாள் தொடர் விடுமுறையை, வெளியூரில் கொண்டாட, ஏற்பாடு செய்தவர்கள், 23ம் தேதி அலுவலகத்திற்கு வர வேண்டும் அல்லது விடுப்பு எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment