Pages

Saturday, June 17, 2017

'நீட்' தேர்வில் தவறான கேள்விகள் என புகார்

மதுரை: 'நீட்' தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கடந்த மே 7ல் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, 'நீட்' தகுதி தேர்வு நடந்தது.11 லட்சம் பேர் எழுதினர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக பதிலளிக்கும் கேள்விக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தவறாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், வினாத்தாளுக்கான பதில்களை சி.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், இரண்டு கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் இடம்பெற்றுள்ளன என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: விதிகள் படி, கேள்வித்தாளில் இரண்டு பதில்களை தேர்வு செய்யக்கூடாது. இதனால் பலர் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை தேர்வு செய்யாமல் விட்டு விட்டனர். ஆனால், தவறான கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதிலை தேர்வு செய்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. 
கேள்விக்கு பதில் அளிக்காதவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment