ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டிருந்த
நிலையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும்
போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்
போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டின் அடையாள சின்னமான
ஜல்லிக்கட்டு போட்டிகள் நிரந்தரமாக நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும்
எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்,
சமூக ஆர்வலர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக
போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டம் இரவு பகல் பாராது ஒரு வார காலமாக
நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment