Pages

Tuesday, January 26, 2016

சான்றிதழுக்கு ரூ.6 லட்சம்: போலி பேராசிரியரை தப்பவிட்ட நிர்வாகம்

நாமகிரிப்பேட்டை;நாமக்கல், அரசு கல்லுாரியில், உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., போலி சான்றிதழ் கொடுத்த பேராசிரியரை, கல்லுாரி நிர்வாகம் தப்பவிட்டதும் தெரியவந்துள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2011ம் ஆண்டு தாவரவியல் உதவி பேராசிரியராக, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த ஜோஸ்பீன் கமோலியா சேர்ந்தார். இவரது, பிஎச்.டி., சான்றிதழின் உண்மை தன்மை அறியும் பொருட்டு, சம்பந்தப்பட்ட, பீஹார் வீர் குன்வார் சிங் பல்கலைக்கு அனுப்பப்பட்டது.



தலைமறைவு:அங்கு சான்றிதழை சரிபார்த்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், அது போலியானது
எனவும், சம்பந்தப்பட்ட மாணவர் மீது குற்றவியல் வழக்கு பதியும்படியும், 2015, நவ., 5ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மீண்டும் உறுதி செய்யக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்தை தொடர்ந்து, 2015 டிச., 23ம் தேதி அன்று உறுதி செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்
பட்டது. போலி சான்றிதழ் என, கடிதம் வந்ததை, கல்லுாரி நிர்வாகம் மூலம் தெரிந்து கொண்ட ஜோஸ்பீன் கமோலியா, இரண்டு மாதங்களுக்கு முன் தலைமறைவாகிவிட்டார்.ஜனவரி, 11ம் தேதி, கல்லுாரி கல்வி இயக்குனர், நாமக்கல், அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வைலட்டுக்கு கடிதம் எழுதி, ஜோஸ்பீன் கமோலியா மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, மேல்நடவடிக்கை எடுக்கும்படியும், அதன் விவரங்களை உடனே அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.
கடிதத்தை, 12ம் தேதி பெற்ற முதல்வர் ஜெயந்தி வைலட், 21ம் தேதி தான் போலீசில் புகார் செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார். இதில் இருந்து, திட்டமிட்டே சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியரை, கல்லுாரி நிர்வாகம் தப்பவிட்டுஉள்ளது தெரியவந்துள்ளது.

சரிபார்க்க வேண்டும்:இது குறித்து, தனியார் கல்லுாரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைகளில் தொடர்புடையவர்கள், பூர்த்தி செய்யாத சான்றிதழ்களை கொண்டு வந்து விற்கின்றனர். பிஎச்.டி., சான்றிதழ், ஆறு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
இது தெரியாத பலர், போலி சான்றிதழை வாங்கி, ஏமாந்து விடுகின்றனர். இதேபோல், வெளி மாநிலங்களில் எம்.பில்.,- - பிஎச்.டி., படித்ததாக சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களின் சான்றிதழ்களையும், சரிபார்க்க வேண்டும்.

நாமக்கல் கவிஞர் மகளிர் கல்லுாரியில் பணியாற்றும், தற்காலிக உதவி பேராசிரியர்கள் சிலரும், அதே பீஹார் பல்கலையில் சான்றிதழ் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment