Pages

Saturday, July 18, 2015

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஏன் பகிரங்கமாக 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் என அறிவித்திருக்கிறது?

ஏன் ஆர்ப்பாட்டம்?

எதற்கு ஆர்ப்பாட்டம்?

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ஏன் பகிரங்கமாக 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் என அறிவித்திருக்கிறது?

இன்னும் உம் மனதில் எழும் விடை தெரியாத வினாக்களுக்கெல்லாம் விடை இதே...

2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை எண்.137 நாள்:09.06.2014-யில்

அரசு ஊழியர் ஒருவர் ஒரே இடத்தில் மூன்று ஆண்டு பணி புரிந்து இருந்தால் அவர்களுக்கும் மாறுதல் அளிக்க வேண்டும் என்ற நிகழ்வில்
மாணவரின் நலனுக்காகவும், பள்ளியின் நலனுக்காகவும்,ஆசிரியர் நலனுக்காக ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் 2015-16 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை எண் 232 நாள் 10.07.2015. -யில் உள்ள நெறிமுறையில் ஆசிரிகளையும் 3 ஆண்டு பணி முடித்திருந்தால் அவர்களுக்கு மாறுதல் வழங்க ஏதுவாக சென்ற ஆண்டின் அரசாணையை திருத்தி உள்ளனர்.

இது ஆசிரியர் மத்தியில் மிகுந்த மன உளச்சலையையும்,மன அமைதியின்மையையும் ஏற்படுத்திவுள்ளது என்றால் அது மிகையகாது.

சென்ற ஆண்டு BRTE - க்கு இதே போல் கட்டாய மாறுதல் வழங்கிய போது அதை எதிர்த்து தடுக்க முற்பட்டது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,ஆனால் நிர்வாக காரணங்கள் இன்னும் பிற காரணங்களுக்காக மாறுதல் அளிக்கப்பட்டது என பின்னர் அறியப்பட்டது.

இது மட்டுமல்ல இன்னும் நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர்,
அவற்றை ஆர்ப்பாட்ட களத்தில் காண்போம்...

ஆக தோழர்களே,உறுப்பினர்களே,
ஆசிரியர் இனமே வில்லிருந்து புறப்படும் அம்பை போல் தயராகுங்கள் ஜூலை 22 -ல் முதன்மை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்காக...

No comments:

Post a Comment