Friday, October 7, 2016
மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 4-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி மற்றும் டி மறறும் பிரிவு பி யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.
மேலும் உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'
சென்னை: மவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், http://www.maef.nic.in இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முறை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ., திட்டம்
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத் தேர்வில், 2014ல் விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டம் அமலானது.
வழக்கமான மதிப்பீட்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்தால், மறு மதிப்பீட்டுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, இரு கல்வி ஆண்டு களில் மறுமதிப்பீட்டுக்கு, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர். அத்துடன், மறுமதிப்பீட்டில், பலரது மதிப்பெண்கள் மாறவில்லை. சொற்ப அளவிலான மாணவர்களுக்காக, பல ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மூன்று வகை மேற்பார்வையுடன், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், பெரிய அளவில் புகார்கள் எழவில்லை.
எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யவும், தற்போதுள்ள திருத்த முறையை தொடரவும், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்
'ஓவியம், கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என, கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியம், கலை, தையல், கைவினை உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை சார்பில், 2015 நவம்பரில் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, தேர்வு மையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; இதில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர், அதிக தேர்ச்சி பெற்றுஉள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, விடைத்தாள் சரியாக திருத்தம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''விடைத்தாள் நகல்கள் வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், அனைத்து மாநில மாணவர்களும்,
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.
Wednesday, October 5, 2016
3 பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கொள்கை தொடர்பான புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்ததற்காக அவர்கள் இந்த பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். இயற்பியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசை, சுவீடன் நாட்டின் நோபல் தேர்வுக்குழு அறிவித்து வருகிறது. நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுபடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இட மாறுதல் உத்தரவு பெற்றும் சிக்கல் : போராட தயாராகும் ஆசிரியர்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது. தொடக்கப் பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது; இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இட மாறுதல் பெற்றனர். அவர்களில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், இன்னும் தங்களின் பழைய இடங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
8ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு தபாலில் சான்றிதழ்
எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு விரைவு அஞ்சலில் சான்றுகளை அனுப்பியுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. எட்டாம் வகுப்பு தேர்வை, தனித் தேர்வர்களாக எழுத விரும்பியோருக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற மாணவ- மாணவியருக்கு உரிய சான்றுகள் நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சான்றுகள் கிடைக்காதவர்கள், அந்தந்த அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?..
ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில்
இருந்தும்நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘tnpds.com’ என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் : கல்வி துறைக்கு 6 வாரம் கெடு
சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இயற்கை பாதுகாப்பு விருது விண்ணப்பிக்க அழைப்பு!!
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் சுகாதாரம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பேணுதல், வன உயிரினங்கள் பாதுகாத்தல், மாணவர்களுக்கான இயற்கை முகாம்,
மரம் வளர்ப்பு உள்ளிட்ட பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இயற்கை பாதுகாப்பு சங்கம் விருது வழங்குகிறது.
போட்டியில், துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் சார்பிலும், தனி நபர்களும் கலந்து கொள்ளலாம். கோவை, திருப்பூர் மாவட்ட பழங்குடியின மாணவர் பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
பள்ளிகளில் சுகாதாரம், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பேணுதல், வன உயிரினங்கள் பாதுகாத்தல், மாணவர்களுக்கான இயற்கை முகாம்,
மரம் வளர்ப்பு உள்ளிட்ட பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க இயற்கை பாதுகாப்பு சங்கம் விருது வழங்குகிறது.
போட்டியில், துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், கல்லுாரிகள் சார்பிலும், தனி நபர்களும் கலந்து கொள்ளலாம். கோவை, திருப்பூர் மாவட்ட பழங்குடியின மாணவர் பள்ளிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.
இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி
தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில், 'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.
தமிழகத்தில், செப்., 30 வரை, ஆதார் அட்டை வழங்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அக்., 1 முதல், அப்பொறுப்பு, தமிழக
அரசின், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, அரசு கேபிள், 'டிவி' மற்றும் மின்னணு கழகமான, 'எல்காட்' வசம் வந்துள்ளது. சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்ததால், சில நாட்களாக, ஆதார் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று முதல், 374 மையங்களிலும், பணிகள் முழுவீச்சில் துவங்குகின்றன.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்னை கள் சரி செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், பல மையங்களில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணிகள் துவங்கின. இன்று முதல், தலைமை செயலகம், ரிப்பன் மாளிகை, எழிலகம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் உட்பட, சென்னையில், 63 இடங்களில், இப்பணிகள் நடைபெறும்.
மாநிலம் முழுவதும், 275 தாலுகா அலுவலகங்கள், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, மொத்தம், 374 இடங்களில், மக்கள், ஆதார் அட்டைக்கு மனு செய்யலாம். அடுத்த வாரத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 600 மையங்களும், முழுவீச்சில் செயல்படும்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இனி மூன்று படிவம்
● ஆதார் அட்டை வழங்க இனி, மூன்று படிவங்கள் தரப்படும்; அவை தமிழில் இருக்கும்
● ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு இருப்பிட சான்று; தனி நபர் சான்றுக்காக, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அஞ்சலகம் வழங்கும் முகவரி சான்றில், ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்
● தனி நபர் சான்று ஆவணங்கள் இல்லாதோர், கிராம நிர்வாக அலுவலரிடம், இருப்பிடச் சான்று பெற்று வரலாம்; இதுவரை இருந்த, 'டோக்கன்' முறை இனி இருக்காது.
Subscribe to:
Posts (Atom)