Pages

Saturday, June 17, 2017

15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில்,


15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.


சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

 கே.பொன்முடி (திமுக):அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செயல் படுத்தப்பட்டுவரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத் தில் (சிபிஎஸ்) ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அரசு தன் பங்காக 10 சதவீதம் செலுத்துகிறது. சிபிஎஸ் திட்ட நிதியை, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெற முடியாத நிலை உள்ளது.


பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்:அரசு ஊழி யர்களுக்கு தற்போது நடைமுறை யில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. அரசு பள்ளிகளில் ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 15 நாட்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள்என்றார்

கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன. புதிதாக கல்லுாரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர்.
இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர், கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பச்சையப்பா மற்றும் மாநில கல்லுாரிகளில், மாணவர்கள், 'பஸ் டே' கொண் ட்டம் நடத்தியதில், பிரச்னை ஏற்பட்டது. மற்ற கல்லுாரிகளில் வழக்கம் போல வகுப்புகள் துவங்கின.
அரசு கல்லுாரிகளில், கல்வி கவுன்சில் கூட்டமும் நடந்தது. இதில், புதிய மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம், அவர்களுக்கான வழிகாட்டும் வகுப்புகள் குறித்து, பேராசிரியர்கள் ஆலோசனை நடத்தினர்.சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தி, அவர்களின், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திறன் சோதிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மாணவர்களின் நிலைக்கு ஏற்ப, அடுத்த வாரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 அடிப்படை பாடங்களை, நினைவு கூறும் வகுப்பாக நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

Departmental Examinations Reforms Committee - Implementation

G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued



TO DOWNLOAD CLICK HERE

21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன.

இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

TRB - GOVT LECTURER IN POLYTECHNIC - EXAM Announcement With Notification,Syllabus and Online Application..

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt.Polytechnic Colleges for the year 2017 -18


முதுநிலை ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட்

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணி, எழுத்து தேர்வுக்கான, ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.trb.nic.in என்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி நேர பதற்றத்தை தணிக்க, முன்கூட்டியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் 
செய்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

'ஸ்மார்ட் கார்டு' பிழை திருத்த குழு அமைப்பு

சென்னை: ''ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள பிழைகளை திருத்த, வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று பேசிய காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி, ''ஸ்மார்ட் கார்டில் ஏராளமான பிழை கள் உள்ளன,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ''தமிழகத்தில் இதுவரை, 1.02 கோடி ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. 
''ஆதார் கார்டில் உள்ள தகவல்கள், அப்படியே ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்படும் போது, மொழி மாற்றத்தில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதை சரி செய்ய, வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என்றார்

கவுன்சிலிங் விண்ணப்ப நிலை அறிய வசதி

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.40 லட்சம் பேர் மட்டும், விண்ணப்பங்களை் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியிடம் சேர்ந்து விட்டதா; பரிசீலினைக்கு எடுக்கப்பட்டதா என்பதை, www.tnea.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

'குரூப் - 2 ஏ' பதவிக்கு வரும் 21ல் கவுன்சிலிங்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யின், 'குரூப் - 2 ஏ' 

பிரிவுக்கு, வரும், 21ல் கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்தி
க்குறிப்பு:
'குரூப் 2 ஏ'வில் அடங்கிய, நேர்முக தேர்வு அல்லாத பணிகளுக்கு, ஜன., 24ல் எழுத்து தேர்வு நடந்தது.
 இதில், தேர்வு பெற்றவர்கள் பட்டியல், ஜூன், 8ல் வெளியானது. அவர்களுக்கு, வரும், 21ல், 
கவுன்சிலிங் நடக்கும். விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 
தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில் தவறான கேள்விகள் என புகார்

மதுரை: 'நீட்' தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய மதிப்பெண் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


கடந்த மே 7ல் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, 'நீட்' தகுதி தேர்வு நடந்தது.11 லட்சம் பேர் எழுதினர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக பதிலளிக்கும் கேள்விக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தவறாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், வினாத்தாளுக்கான பதில்களை சி.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், இரண்டு கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் இடம்பெற்றுள்ளன என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: விதிகள் படி, கேள்வித்தாளில் இரண்டு பதில்களை தேர்வு செய்யக்கூடாது. இதனால் பலர் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை தேர்வு செய்யாமல் விட்டு விட்டனர். ஆனால், தவறான கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதிலை தேர்வு செய்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் வழங்க சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. 
கேள்விக்கு பதில் அளிக்காதவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும், என்றனர்.

மதுரையில் ஆசிரியர் இல்லம் முடிவை கைவிட்டது அரசு

கட்டடம் கட்ட இடம் கிடைக்காததால், மதுரையில் ஆசிரியர் ஓய்வு இல்லம் கட்டும் பணி கைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காக, பெற்றோர், ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது.
இந்த கழகத்தின் சார்பில், கொடி நாள் நிதி, மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு, அந்த நிதி ஆசிரியர்களின் நலனுக்கு செலவிடப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் நலநிதி திட்டத்தில், சென்னை மற்றும் திருச்சியில், ஆசிரியர் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருச்சிக்கு வரும் ஆசிரியர்கள், இவற்றில் குறைந்த வாடகையில் தங்கி செல்கின்றனர். இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வரும், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்கும் இடம் தேவைப்பட்டது. அதனால், மதுரையிலும், அதை தொடர்ந்து கோவையிலும், ஆசிரியர் இல்லம் அமைக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக இடம் தேடியும், மதுரையில் கிடைக்கவில்லை. எனவே, மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டும் முடிவு, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது; கோவையில் மட்டும் கட்டப்படும் என, அரசின் கொள்கை விளக்க குறிப்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING NEWS : 37 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


*பள்ளிக்கல்வித்துறை அறிவுப்புகள்.*
பள்ளிகள்
1) 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
2) புதுமைகளை புகுத்தி சிறப்பாகச் செயல்படும் அரசு பள்ளிகளை கண்டறிந்து மாவட்டத்திற்கு 4 பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு “புதுமைப் பள்ளி” விருது ரூ.1.92 கோடி செலவில் வழங்கப்படும்

CRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும்.

*CRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*
*2017-ஆகஸ்டு 5* 
*2017-செப்டம்பர்- 16* 
*2017-அக்டோபர்- 7*

*2018-ஏப்ரல் மாதத்தில் 7 நாட்கள்,*  *20,23,24,25,26,27,30.*
*ஈடுசெய் விடுப்பு இல்லை.*
*பள்ளி வேலை நாட்கள்- 210.*

2017 - 18 SATURDAYS WORKING LIST

As per the school calender the following saturdays are working day for all types Govt Schools

June
  • 17.06.2017
July 
  • 08.07.2017
  • 15.07.2017
  • 22.07.2017

Sep  
  • 23.09.2017

Oct

  • 21.10.2017
Dec
  • 23.12.2017

அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இலக்கு - பள்ளிக்கல்வி செயலர் மதிப்புமிகு உதயசந்திரன் அவர்கள் உத்தரவு


அரசுபள்ளிகளில் 1ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், ஐந்தாண்டுகளுக்கு 
முன் இருந்த எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் எனபள்ளி கல்வி செயலர் உத்தரவிட்டுள்ளார். 

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி

 
சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இட பற்றாக்குறை காரணமாக, மாரியம்மன் கோவிலிலும், மரத்தடியிலும் பள்ளி நடந்து வந்தது.

தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால், இன்று, மூன்று மாடிகளுடன் தொடுதிரை பலகை, கணினி வழிக்கல்வி, 4டி அனிமேஷன் என, நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, கற்பித்தலில் புதுமை படைத்து வருகிறது.

கடந்த, 1926ல், மிகச் சிறிய இடத்தில் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2004ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இதை மாற்ற என்ன செய்யலாம் என, யோசித்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம், முக நுால் நண்பர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி மூலம், பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.

இதன்படி, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே நவீன கழிப்பறைகள், மாணவியருக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்துளை கிணறு, ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் தொடர்பான வண்ண ஓவியங்கள், அனைத்து மாணவர்களுக்கும் இருக்கை வசதி, யு.பி.எஸ்., வசதியுடன் கூடிய கணினி அறை.ஹோம் தியேட்டர், புரொஜக்டருடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், தொடுதிரை பலகை, நவீன அறிவியல் ஆய்வகம், நுாலகம், மாடித்தோட்டம், 4டி அனிமேஷன் கல்வி, இங்கிலாந்தில் உள்ள ஆசிரியர்களுடன் இணையம் வழியே ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கப்படுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியை சுபலஷ்மி கூறியதாவது:

உள்கட்டமைப்பு வசதிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தியதால், மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, உள்கட்டமைப்பு வசதி பற்றி தெரிவிக்கின்றனர். மாணவர்களின் திறனை கண்டு, சிறந்த அரசு பள்ளியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(RESTRICTED HOLIDAYS) 2017

(RESTRICTED HOLIDAYS) 2017

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு


22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
04.08.2017-வெள்ளி-வரலட்சுமி விரதம்
07.08.2017-திங்கள்-ரிக் உபகர்மா
08.08.2017-செவ்வாய்-காயத்ரி ஜெபம
்25.08.217-வெள்ளி-சாம உபகர்மா
31-08.2017-வியாழன்-அர்ஃபா
04.09.2017-திங்கள்-ஓணம்
22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு
18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு
02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்
04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி
02.12.2017-சனி-திருக்கார்த்திகை
24.12.2017-ஞாயிறு-கிறிஸ்துமஸ் ஈவ்
29.12.2017-வெள்ளி-வைகுண்ட ஏகாதேசி
31.12.2017-ஞாயிறு-நியூ இயர்ஸ் ஈவ்

*மத்திய அரசு அதிரடி: இனி மாணவர்களுக்கும் செக்*

பொதுத்தேர்வுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதை நீக்க மத்திய முடிவு செய்துள்ளது.*

 *இது தொடர்பாக சிபிஎஸ்இ மற்றும் 32 மாநில கல்வி வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.*


 *ஏற்கனவே சிபிஎஸ்இயின் கருணை மதிப்பெண் ரத்து முடிவிற்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.*

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது. அசோக் லாவசா தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளது.  

இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் வரவில்லை. இந்நிலையில் இந்த பரிந்துரைகள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என ஒரு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

இதில் வீட்டு வாடகை அலவன்ஸ் 27% உயர்வு உட்பட பல அலவன்ஸ்களை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் 7ஆவது பே கமிஷன் ஆணையை செயல் படுத்த ரூ 65000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பற்றாமல் போனால் அரசு மேலும் தொகைய உயர்த்த வேண்டி வரும்.

இந்த முறை 7ஆவது பே கமிஷன் நிறைய அலவன்சுகளை ஒழித்த போதிலும் பல அலவன்ஸ் தொகைகளை அதிகப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

அங்கன்வாடிகளுக்கு பாடத்திட்டம் : தனியாருக்கு நிகரான கல்வி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் மூன்று முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. 

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

*SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Sunday, January 22, 2017

நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்குமாம்.. சொல்கிறது தமிழக அரசு

 ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பிடல் முறை' மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு | பள்ளி மாணவர்களிடம் எதிர்நோக்கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது. 

ராணுவ அகாடமி நுழைவுத்தேர்வு

பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி பெறுவதற்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமியில், ராணுவ அதிகாரி படிப்பிலும் சேர முடியும். இதற்கான, தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை நுழைவுத்தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு,
நேற்று துவங்கியது; பிப்., 10 வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்தோரும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.