Pages

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

*SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Sunday, January 22, 2017

நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்குமாம்.. சொல்கிறது தமிழக அரசு

 ஜல்லிக்கட்டு போராட்டத்தால் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பிடல் முறை' மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு | பள்ளி மாணவர்களிடம் எதிர்நோக்கும் கற்றல் திறன்களை மதிப்பிடு வதற்கான அளவுகோல்களை வரைமுறைப்படுத்தும், 'கற்றல் திறன் மதிப்பிடல் திட்டம்' அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது. 

ராணுவ அகாடமி நுழைவுத்தேர்வு

பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி பெறுவதற்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமியில், ராணுவ அதிகாரி படிப்பிலும் சேர முடியும். இதற்கான, தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை நுழைவுத்தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு,
நேற்று துவங்கியது; பிப்., 10 வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்தோரும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.